Thursday, December 21, 2017

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக் கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

கன்னி: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத் தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகக வசதி பெருகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகமாகும். கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோ கத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக் கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கும்பம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வரக்கூடும். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer