1998 ஆம் ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பல நாடுகள் கூட்டாக இணைந்து விண்ணில் நிறுவிய செய்மதி தான் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதி ஆகும்.
பூமியின் தரை மேற்பரப்பில் இருந்து 350 - 450 Km உயரத்தில் இது மனிதர்கள் வசிக்கத் தக்க முறையில் மணிக்கு 27 724 Km வேகத்தில் ஒரு நாளைக்கு 15.54 முறை இது பூமியைச் சுற்றி வருகின்றது. உலகின் முக்கிய 5 விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கிய இந்த ISS செய்மதியின் பராமதிப்புக்கு மிக அதிகளவில் நிதி ஒதுக்கி வருவது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும். ISS செய்மதி பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு உபயோகப் பட்டாலும் அதன் முக்கிய பயன்பாடு வருங்கால விண்வெளிப் பயணங்களுக்கு பூச்சிய ஈர்ப்பு விசையில் மனிதர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பது தான்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்புப் படி நாசாவின் ஆராய்ச்சிப் பணிகளில் சந்திரன், செவ்வாய்க் கிரகத்துக்கான பயணம் மற்றும் சூரிய குடும்பத்தின் தொலைவிலுள்ள கிரகங்களுக்கான ஆராய்வு என்பவற்றுக்கு அதிக நிதி செலவிடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டுடன் ISS இற்கு நிதி ஒதுக்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகப் போவதாகத் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2014 இல் முதலில் விடுக்கப் பட்டது.
ISS இன் முக்கியத்துவம் கருதி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாசா முடிவு செய்தாலும் அதற்கு அமெரிக்க காங்கிரஸின் விண்வெளி மற்றும் விஞ்ஞானப் பிரிவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ISS இன் பராமரிப்புக் கைவிடப் படும் நிலையில் அமெரிக்காவின் தனியார் விண் ஓட நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் வேர்ஜின் கேலக்டிக் போன்றவை அதனை விலை கொடுத்து வாங்க முன்வரலாம் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tuesday, December 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment