Saturday, December 2, 2017

ஜப்பானின் 123 ஆவது மன்னரான 83 வயதாகும் அகிஹிட்டோ எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதி பதவி விலக உள்ளார். முதுமை மற்றும் உடல்நலக் குறைவு இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

கடந்த 200 ஆண்டுகளில் இதற்கு முன் கொசுக்கு என்ற மன்னர் மட்டும் தான் ஜப்பானில் 1817 ஆம் ஆண்டு பதவி விலகி இருந்தார். மேலும் ஜப்பானில் மன்னர் ஒருவர் பதவி விலக சட்டத்தில் இடமில்லாது இருந்த நிலையில் அண்மையில் தான் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதையடுத்து அகிஹிட்டோவின் பதவி விலகலை ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே ஊடகங்களுக்கு உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அவர் பதவி விலகிய மறுநாள் அகிஹிட்டோவின் மூத்த மகனான இளவரசர் நருஹிட்டோ மன்னராக முடி சூட்டவுள்ளார். இந்த இரு நிகழ்வுகளும் ஜப்பான் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப் படவுள்ளது. ஜப்பானின் மன்னர் பாரம்பரியம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer