Wednesday, December 27, 2017

கடந்த சில நாட்களில் பிலிப்பைஸைத் துவம்சம் செய்து சென்ற டெம்பின் புயலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக எல் சால்வடோர் மற்றும் மிண்டானோ தீவுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிகவும் வலிமையாக டெம்பின் புயல் தாக்கியதில் ஆயிரக் கணக்கான வீடுகள் சேதம் அடைந்தும் பாலங்கள் வீதிகள் என்பன உடைந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதுடன் சுமார் 70 000 பேர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது வியட்நாமை நோக்கிச் சென்றுள்ள டெம்பின் புயலின் வீரியம் குறைவடைந்துள்ளதால் அங்கு அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வியட்நாம் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer