Wednesday, December 20, 2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: இரவு 7.26 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் நய மாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபா ரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வாகன பழுதை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபா ரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். இரவு 7.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர் கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உதவி கிட்டும் நாள்.

துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர் கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவு கூடும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர் களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர் கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

தனுசு: இரவு 7.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப் பதால் குடும்பத்தில் உள்ள வர்கள் தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். பூராடம் நட்சத் திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சா தீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மகரம்: கணவன் மனைவிக் குள் வாக்குவாதம் வரும். யாரிடமும் உணர்ச்சிவசப் பட்டு பேசாதீர்கள். உறவினர் கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். இரவு 7.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப் புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer