Sunday, December 17, 2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. திட்ட மிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயார் ஆதரித்துப் பேசுவார். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். அமோகமான நாள்.

கடகம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரம் செழிக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer