Saturday, December 16, 2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.
கணவன்-மனைவிக்குள் மனஸ் தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழி யில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மோதல் கள் வந்து நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்த வர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங் கள் பிறக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்துப் போங்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. வியாபா ரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உயரதி காரிகளுடன் மோதல்கள் வரும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். பயணங்களின் போது விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத் துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதி யை பைசல் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந் தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலை கள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer