Tuesday, December 12, 2017

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். தோற்றப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய நாள்.

துலாம்: யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் அளவாக பழகுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer