Thursday, December 28, 2017

10 வருடங்களுக்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் படுகொலை செய்யப் பட்ட அந்நாட்டுப் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் படுகொலை தொடர்பில் வெளியாகி உள்ள முக்கிய சில தகவல்களைப் பார்ப்போம்.

2007 டிசம்பர் 27 ஆம் திகதி ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு வாகனத்தில் புறப்பட்ட போது பிலாவல் என்ற இளம் தலிபான் தீவிரவாதியால் துப்பாக்கியால் சுடப்பட்டும் தற்கொலைக் குண்டு தாக்குதல் மூலமும் இவர் கொல்லப் பட்டார்.

1990 களில் இருமுறை பிரதமராகப் பதவி வகித்திருந்த அவர் 3 ஆவது முறையும் பிரதமராகப் போட்டியிட்ட போதே இவ்வாறு கொல்லப் பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து இவரின் ஆதரவாளர்களால் பாகிஸ்தானில் கடும் வன்முறை வெடித்தது. இந்நிலையில் பூட்டோ படுகொலை செய்யப் பட அரசுக்குள் இருந்தே சிலர் நாச வேலை செய்ததாகத் தற்போது பாகிஸ்தான் முன்னால் இராணுவத் தளபதியான முஷாரஃப் கூறியுள்ளார். ஏற்கனவே பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் முஷாரஃப் இற்கும் பங்கு இருக்கின்றது என்ற ஊகங்கள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் தன் தாய் படுகொலை செய்யப் படுவதை முன் கூட்டியே அறிந்த முஷாரஃப் அரசு அவருக்குப் பாதுகாப்புத் தர மறுத்து விட்டது என அவரின் மகனும் அரசியல் வாரிசுமான பிலாவல் பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதவிர பூட்டோவின் கணவரான ஆசிஃப் அலி சர்தாரி அவரின் மரணத்துக்குப் பின் அதிபரான போதும் இது தொடர்பான முறையான வழக்கு விசாரணையை மேற்கொள்ள அவர் தவறி விட்டார் என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer