Saturday, December 2, 2017

வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த 31 வருடங்களில் விஜயம் செய்த முதல் பாப்பரசரான போப் பிரான்சிஸ் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் 1 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

இந்த அணிவகுப்பு டாக்காவின் சுஹ்ரவாடி உத்யன் பூங்காவில் இடம்பெற்றது. பாப்பரசரின் மியான்மார் மற்றும் பங்களாதேஷுக்கான விஜயம் மியான்மாரில் இனவழிப்புக்கு உட்பட்டு பங்களாதேஷுக்கு தஞ்சம் புகுந்த 620 000 றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு சர்வதேசம் கரிசனை காட்ட வேண்டும் என்பதைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. ஆனால் றோஹிங்கியா அகதிகள் என்று பெயர் குறிப்பிடாது ராக்கைன் மாநிலத்தில் இருந்து அகற்றப் பட்ட அகதிகள் என்று அவர்களைக் குறிப்பிட்ட போப் கடும் சிரமத்துக்கு மத்தியில் வங்கதேசம் இந்த அகதிகளுக்கு அளித்து வரும் ஆதரவை வரவேற்றுப் பேசினார்.

மேலும் இந்த அகதிகள் பிரச்சினையை வங்க தேசம் கையாள அந்நாட்டுக்கு சர்வதேசம் பொருளுதவியும் வழிகாட்டுதலும் அளிக்க வேண்டும் என்றும் போப் குறிப்பிட்டார்.

வங்கதேசத்தில் சில றோஹிங்கியா பொது மக்களையும் சந்தித்த போப் அவர்களது அனுபங்களைக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து உலகக் கத்தோலிக்கர்களுக்கு மாத்திரம் அல்லாது மொத்த சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளையும் கேட்டு அவர்களுக்கு உதவி வரும் பாப்பரசரின் அழுத்தத்துக்கு சர்வதேசம் செவி சாய்க்கும் என றோஹிங்கியா அகதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் கத்தோலிக்கர்களின் சனத்தொகை மொத்த சனத்தொகையின் வெறும் 0.5% வீதமே என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer