Monday, November 20, 2017

சிம்பாபே நாட்டு அதிபராக றொபேட் முகாபே கடந்த 37 ஆண்டுகளாக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவரது நம்பிக்கைக்குரிய ராணுவத் தளபதி நாட்டை ராணுவ கட்டுப்பாடினுள் கொண்டு வந்து. றொபேட் முகாபேயை வீட்டுக் காவலில் வைத்துள்ளார். மரியாதை நிமிர்த்தம் தன்னை தானே ராஜினாமா செய்வதாக அறிவித்தால் எல்லோருக்கும் நல்லது. உங்கள் மரியாதையும் காப்பாறப்படும். அதன் பின்னர் , நீங்கள் விரும்பிய ஒரு நாட்டுக்குச் சென்று உங்கள் மிகுதி காலத்தை வாழலாம் என்று ராணுவ தளபதி, நல்ல ஆபர் ஒன்றை மேசை மேல் வைத்தார்.

அதற்கு ஒத்துக் கொள்வது போல நாடகமாடிய மொகாபே. தான் தேசிய தொலைக் காட்சியில் 20 நிமிடம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது தான் தனது ராஜினாமாவை மக்களுக்கு அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராணுவ தளபதி. அவரை தேசிய தொலைக்காட்சியில் பேச அனுமதித்துள்ளார். நேற்று 20 நிமிடமாக பேசிய அவர். இறுதிவரை ராஜினாமா குறித்து எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. இறுதிவரை அவர் ராஜினாமா பற்றி கூறவே இல்லை. இதனால் அன் நாட்டு அரசியல்வாதிகள் தொடக்கம், ராணுவம் வரை அவர் மீது மேலும் வெறுப்படைந்துள்ளார்,

ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்தில். அவரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கூட. அவர் ராணுவத்திற்கு சவால் விடுக்கும் வகையில் நாட்டு மக்களிடம் தனக்கு உதவுமாறு TV மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி அதிகாரம் என்பது ஒரு போதை என்பது எவ்வளவு சரியாக உள்ளது. 90 வயதை தாண்டியுள்ள மொகாபே, 37 ஆண்டுகள் அன் நாட்டை ஆண்டு குட்டிச் சுவராக்கியது தான் மிச்சம். பலருக்கு தெரியாத விடையம் ஒன்று உள்ளது. சிம்பாபே நாட்டில் அன் நாட்டிற்கான காசு இல்லை. அமெரிக்க டாலரையெ அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன் எனில் அன் நாட்டு காசு, மிக மிக மலிவானது. 3ம் உலக நாடுகளை காட்டிலும் அன் நாட்டுக் காசுக்கு மதிப்பே இல்லை. ஒரு அமெரிக்க டாலரை சிம்பாபே நாட்டு காசுக்கு மாற்றினால், கத்தை கத்தையாக பணம் கிடைக்கும். இதனால் அவர்கள் அன் நாட்டு காசை பாவிப்பதை விட்டு விட்டார்கள். 90 சதவிகித மக்கள் அமெரிக்க டாலரை பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சிம்பாபே நாட்டில் பல வைரச் சுரங்கங்கள் இருக்கிறது. அங்கே வெட்டி எடுக்கப்படும் வைரக் கற்களை விற்றாலே பல பில்லியன் டாலர்களை வருமாணமாகப் பெறமுடியும். ஆனால் அந்த இடங்கள் அனைத்தையும் சீனாவுக்கு மொகாபே தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இதற்காக அவர்கள் 7.5 மில்லியன் செலவில் மொகாபேக்கு ஒரு மாளிகையை கட்டிக் கொடுத்துள்ளார்களாம். இப்படி அன் நாட்டையே அழித்து குட்டிச் சுவராக்கிய மொகாபே இன்னும் பதிவில் நிலைக்க ஆசைப்படுவதை என்னவென்று சொல்வது ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer