லட்சோப லட்சம் கனவுகளுடன் தமிழ் படத்தில் நடிக்க வந்த மெஹ்ரீனுக்கு இப்படியொரு ஷட்டர் குளோஸ் சங்கடம் வருமென்பது தெரிந்திருக்க நியாயமில்லை.‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ஹீரோயினான அவர், பதினைந்து நாட்கள்தான் இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார்.
படத்தில் எண்ணி நான்கு சீன்கள் கூட வரவில்லை. அந்தோ பரிதாபம்... அதற்கும் வந்தது வினை.
பெரும்பாலான விமர்சனங்களில் இந்தப்படத்தில் ஹீரோயினுக்கு ஒரு வேலையும் இல்ல... என்று கொளுத்திப்போட, மெஹ்ரீன் போர்ஷனையே படத்திலிருந்து நீக்கிவிட்டார் டைரக்டர் சுசீந்திரன்.
கொடுமை என்னவென்றால், தன்னை தேடி வந்த படக் கம்பெனிகளுக்கெல்லாம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ரிலீசுக்கு பிறகு வாங்க... என்று சொல்லியனுப்பினார் மெஹ்ரீன். இப்போ? நெஞ்சில் துணிவிருந்தாலும், மெஹ்ரீன் எதுக்கு? என்று நழுவ ஆரம்பித்திருப்பார்கள்.
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment