கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பாலா, வரைந்த கார்ட்டூன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் ஆகியோரை மிகவும் அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கார்ட்டூனிஸ்ட் பாலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில், தான் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில், தன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நவம்பர் 29ம் தேதிக்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
Home
»
Tamizhagam
»
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment