டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து வியாழக்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. நேற்று வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சசிகலா தரப்பினர், இன்று யாரும் எதிர்ப்பு தெரிவித்து எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.
அதற்கு காரணம் சசிகலா, இளவரசி, சுதாகரன், தினகரன் மனைவி அணுராதா, கார்த்திக்கேயன், சிவக்குமார், பூங்குன்றம், விவேக், திவாகரன் என விரிவில் சசிகலா உறவில் உள்ள கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக திவாகரனுக்கு சொந்தமான செங்கமலதாயார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரூபாய் 25 லட்சம், 6 ரோலக்ஸ் வாட்சுகள், தங்கம், வைரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. பெண்கள் விடுதியில் யாரும் சோதனை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த விடுதியில் திவாகரன் ஒளித்து வைத்திருந்த தங்கமும், வைரமும் மாட்டியுள்ளது.
அதேபோல, தினகரன் தம்பியான பாஸ்கரன் வீட்டில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெயா டிவி உள்பட, சசிகலாவின் அனைத்து கம்பெனிகளுக்கும் ஆடிட்டராக இருந்தவர் செல்வம். அவரது வீட்டில் இருந்து 30 கம்பெனிகளின் கணக்குகளை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகள், தங்கம், வைரம் என நீளும் இந்த சோதனையின் முடிவில் விவேக், திவாகரன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் இணைந்து பணபறிமாற்றம் மோசடி வழக்கை அமலாக்கத்துறை பாய்ச்ச உள்ளது.
இந்த பணபறிமாற்ற மோசடி வழக்கை தொடர்ந்து சிபிஐயும் இந்த விவகாரத்தில் ஈடுபட உள்ளது. இவர்கள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் நேற்று வாய்த்திறந்த தினகரன் இன்று வாயை மூடிவிட்டார்.
Friday, November 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment