Wednesday, November 22, 2017

அறம் படத்தின் மீது நயன்தாரா வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. படமும், அதில் நயன்தாராவின் நடிப்பும் ஒரு சேர கொண்டாடப்பட்டுவிட்டது மீடியாவில். இதையடுத்து தன் சினிமா வாழ்வில் முதன் முறையாக தியேட்டர் விசிட்டுக்கும் சம்மதித்தார் நயன்.

சென்னையிலிருக்கும் மூன்று தியேட்டர்களுக்கு அடுத்தடுத்து அவர் விசிட் அடிக்க, சோஷியல் மீடியாவில் புகைப்படத்துடன் செய்தி பரவியது. அந்த நிமிஷத்திலிருந்து பிய்த்துக் கொண்டது அறம் கலெக்ஷன். இன்னும் சந்தோஷத்திற்கு ஆளான நயன்தாரா, “ஒரு பிரஸ்மீட் வைங்க. நானே நேரா வந்து பிரஸ்சுக்கு நன்றி சொல்லணும்” என்று சொல்லியிருக்கிறாராம். பிரஸ் என்றாலே பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடிய நயன் மனம் மாறியது நல்ல விஷயம்தான். யாரும் கத்தி வீசிக் காயப்படுத்துற கேள்வியோடு வராதீங்க சாமீகளா... புண்ணியமா போகும்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer