1980 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்த சிம்பாப்வே இன் ஒரேயொரு தலைவராக இதுவரை காலம் சுமார் 37 வருடங்களாக பதவி வகித்த 93 வயதாகும் ரொபேர்ட் முகாபே அண்மையில் அந்நாட்டு தலைநகரை இராணுவம் முற்றுகை இட்ட பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். தற்போது சமாதானமான முறையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட முகாபே தானாகவே தனது அதிபர் ராஜினாமா செய்ய 24 மணி நேர அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.
முகாபே இன் பதவிக் காலத்தில் பிரதி அதிபராகச் செயற்பட்ட எம்மெர்சன் நங்காக்வா என்பவரே முகாபே இற்கு அடுத்து அதிபர் பதவிக்கு வரவுள்ளதாக ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். முன்னதாக முகாபே இற்கு பின் அதிபராக வருவார் என எதிர்பார்க்கப் பட்ட 52 வயதாகும் அவரின் மனைவி கிரேஸ் என்பவரும் ஏனைய 3 கேபினட் அமைச்சர்களுடன் சேர்த்து ஆளும் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.
சிம்பாப்வே இல் தற்போது முகாபே இன் பதவி நீக்கத்தை பொது மக்கள் வரவேற்று ஆங்காங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதிய அதிபராகவுள்ள The Crocodile என அழைக்கப் படும் நங்காக்வா சர்வதேசத்துடன் சிம்பாப்வே இன் உறவை வலுப்படுத்துவதும் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை வளப்படுத்துவதுமே தனது நோக்கம் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வாதிகாரியான முகாபே இனது வீழ்ச்சியை அடுத்து உகண்டாவின் யோவெரி முசெவெனி மற்றும் கொங்கோ குடியரசின் ஜோசெஃப் கபிலா ஆகியோருக்கும் பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சிம்பாப்வே அதிபர் பதிவியில் இருந்து விலக திங்கள் மதியம் வரை முகாபேக்கு காலக்கெடு!
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment