பொன்ராம் இயக்கிய ரஜினி முருகன், படு பயங்கர தாமதத்தோடுதான் தியேட்டருக்கே வந்தது. படம் வருவதற்குள் முள்ளங்கி பத்தை போலிருந்தவர், முறிந்த வெண்டைக்காய் ஆனதெல்லாம் சினிமாவுலகம் அறிந்ததுதான். மனுஷனுக்கு ராசி அப்படி போலிருக்கிறது.
இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி நடிக்கிறது.
பிரச்சனை இப்போது சமந்தா ரூபத்தில். எனக்கு கல்யாணம் ஆகறதுக்குள்ள என் போர்ஷனை முடிச்சுருங்க என்று சமந்தா ஸ்டிரிக்டாக சொல்லியும் கோட்டை விட்டுவிட்டார் பொன்ராம்.
பொண்ணு ஹனிமூன் போயாச்சு. திரும்பி வந்தாலும் பழைய மாதிரி ஷுட்டிங் வருவாரா தெரியாது.
அவரை இனிமேல் படத்திலிருந்து நீக்கவும் முடியாது. இப்படி இடியாப்ப சிக்கலில் இருக்கும் பொன்ராம், ‘நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் சரி’ என்கிறாராம் வேதாந்தி போல்! வாழ்க்கையை விடுங்க... சமந்தாவை விட்றாதீங்க!
Thursday, November 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment