முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு நானே, அதற்கு பிறகு என் குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். எனவே, வெகுவிரைவில் கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.
Wednesday, November 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment