Sunday, November 26, 2017

“தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் தலைவர் மேற்க்ணடவாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவும் சில சிங்கள அமைப்புக்களும் இந்த இடைக்கால அறிக்கையில் மறைமுகமான சமஷ்டித் தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட இருப்பதுடன் பின்னர் நாடும் பிரிக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு சிங்கள மக்களை துண்டிவிட்டு துவசங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.

தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத எந்தத் தீர்வுத்திட்டத்தையும் தமிழ்க் கூட்டமைப்பு ஏற்காது இதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. 1989ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டினாலும் கடும் முயற்சியின் பயனாலும் 13வது சீர்திருத்தம் உருவாக்கப்பட்டது. மாவட்ட சபையைப் பெற தத்தளித்த எமக்கு வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான தீர்வாக அமையவில்லை. இதனால் 13வது சீர்திருத்தத்தில் பல முன்னேற்றங்கள் அடையவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம் அது பின்னர் நிறைவேறாமல் போய்விட்டது.

1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று முதலாவது குடியரசு அரசியல் சாசனத்தினை உருவாக்கினார்.

இன்று உருவாக்கிய அரசியல் சாசனத்தில் தமிழர் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்று தமிழரசுக்கட்சி மிகுந்த பிரயத்தனத்தினை மேற்கொண்டும் எதுவும் நடந்தேறவில்லை அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கான சமட்சி ஆட்சி முறை, சகல அதிகாரங்களுடனும் கூடிய அதிகாரப்பகிர்வு மற்றும் பிராந்திய ஆட்சி முறை போன்ற ஆட்சி அதிகாரங்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அண்ணன் தர்மலிங்கமும், தந்தை செல்வாவும் எவ்வளவோ முயற்சித்தும் எதுவுமே கைகூடவில்லை.

இதே போன்ற ஒரு நிலைப்பாடுதான் 1978ஆம் ஆண்டு வர்த்தன ஜே.ஆர். ஜயவர்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியதிகாரத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அந்தக்காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக அண்ணன் அமிர்தலிங்கம் இருந்தார் அப்போது இந்த நாட்டிலே ஒற்றையாட்சி முறைதான் காணப்பட்டது.

இதன் பிற்பாடு 1983ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவும், ராஜீவ்காந்தியின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் 13வது திருத்த சாசனம் இன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது அதாவது வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணங்களாக இணைக்கப்பட்டது இந்த இணைப்பிற்கு போதிய உறுதிப்பாடு இருக்கவில்லை கனிசமான முன்னேற்றம் மாத்திரமே இருந்தது இதனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை அந்த காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டனி தேர்தலில் போட்டியிடவும் இல்லை.

இந்த காலகட்டத்தில் அண்ணன் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகிய நாங்கள் மூவரும் ஒரு கடிதத்தினை ராஜிவ்காந்திக்கு அனுப்பியிருந்தோம் 1983 கார்த்திகை மாதம் அவர் காத்மண்டுவிற்கு சென்று அங்கிருந்து இலங்கைக்கு திரும்பியபோது நாங்கள் அனைவரும் அவரை சந்தித்து 13வது திருத்த சாசனம் தொடர்பாக 4 நாட்களாக தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அந்த நேரத்தில் 13ஆவது சாசனத்திற்கான 12 கருமங்களை அன்றிருந்த ஜே.ஆர். ஜயவர்தன ஏற்றிருந்தார்.

அதன் பிற்பாடு தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இந்தியப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட போர் காரணமாக அந்த நடவடிக்கை இடைநடுவே கைவிடப்பட்டது அதன்பிற்பாடு நாங்கள் அது தொடர்பான பல விடயங்களை முன்னெடுத்திருந்தோம் அந்தவகையில் பிரேமதாசாவினுடைய காலத்திலும் பின்னரான சந்திரிக்காவினுடைய காலத்திலும் பாராளுமன்றத்தில் புதிய அரசியல் சாசன பகிர்வு கொண்டுவரப்பட்டது.

ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்பை பலம் இல்லாமையினால் அது நிறைவேற்றப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒஸ்லோ பிரகடனம் வெளிவந்தது. அதாவது தமிழ்மக்கள் சரித்திரரீதியாக வாழ்ந்த பகுதியில் சமஷ்டி ரீதியான ஆட்சிடைபெறவேண்டும் என இலங்கை அரசு ஏற்றுக்கொண்டபோதும் அது நிறைவெற்றப்படவில்லை .

மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி அந்தந்தப் பகுதிகளுக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கவேண்டும் எனத்தெரிவித்தும் அதுவும் நடைபெறாமல்போன வரலாறுகள்தான் இருக்கின்றன.

இந்நிலையில்தான் தமிழ் பேசும் மக்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேனை தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபிடம் ஏற்றி இருக்கின்றேம் இவ் அரசாங்கத்தில் பிரதமராக ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இருப்பதுடன் பெரும்பான்மைக்கட்சிகள் இரண்டுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில கட்சிகளும் இணைந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசியல் சாசணத்தை நிறைவேற்றினால் அது முன்னேற்றகரமானதாக அமையும். இதனைக் குழப்பும் நோக்கில் சில தலைமைகள் செயற்படுகின்றனர்.“ என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer