அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானவை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் 7வது மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு, அலரி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தி, அமைதியான உலகைக் கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
பௌத்த மதத்தால் போசிக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றை உடைய நாடாகிய இலங்கையில், இவ்வருட பௌத்த மாநாடு கோலாகலமான முறையில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. இம்மாநாட்டின் மூலமாக, உலக நாடுகளுக்கு வழங்கப்படும் செய்தியானது காலத்துக்கு உகந்ததாக அமைகின்றது.” என்றுள்ளார்.
Friday, November 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment