மலையகத் தமிழ் மக்களை புதிய அரசியலமைப்பில் தேசிய இனமாக அங்கீகரிப்பது கட்டாயமாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நான்காவது நாளாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசமைப்பில் மலையகத் தமிழர்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால், இடைக்கால அறிக்கையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கை முன்மொழிப்பட்டிருக்கவில்லை.
மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் எதற்காக கோருகின்றோம். இடைக்கால அறிக்கையில் அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், யார் அந்த சிறுபான்மை இனங்கள் என்று அடையாளப்படுத்தப்படவில்லை.
இலங்கையில் நான்கு தேசிய இனங்கள் வாழ்கின்றது என அடையாளப்படுத்துவதே எமது கோரிக்கை. இலங்கைத் தமிழர்கள் என்று மலையகத் தமிழர்களை அடையாளப்படுத்த முடியாது. காரணம் இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வந்தவர்கள். நாங்கள் இந்த நாட்டில் பிரஜாவுரிமைக்காகப் போராடிவந்தவர்கள்.
அத்துடன், மலையக தமிழர்கள் கலாசார ரீதியாக வேறு பண்பாட்டை கொண்டுள்ளனர். மலையகத் தழிழர்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக அங்கீகாரம் அளிக்கப்படும்போதுதான் அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்.
இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள இரண்டாம் சபைக்கு மாகாணசபை பிரிதிநிதிகளே உள்வாங்கப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் சபைக்கு சிறுபான்மை சமூகங்களின் பிரநிதிகளே உள்வாங்கப்பட வேண்டும். அதற்காகவே இரண்டாம் சபை முன்மொழியப்பட்டது. இது குறித்து தெளிவான இணக்கப்பாட்டை எட்ட பேச்சுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.
Friday, November 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment