வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தை ஆளுநர் கோரியுள்ளார். முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம் முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்புக்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசியக் கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பான சில ஆவணங்களும் முதலமைச்சருக்கு ஆளுனரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
தேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனிடம் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரல்!
Friday, November 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment