“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. அவருக்கு நெருக்கடிகள் எதனையும் நான் என்றைக்குமே வழங்க மாட்டேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் தனக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக பொய் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும், தேசிய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கோடிகாட்டி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'பிரதமருக்கும், எனக்குமிடையே எவ்வித முரண்பாடும் இல்லை. வெளிப்படையாகவே பேசி பிரச்சினைகளைத் தீர்த்துவருகின்றோம். அரசைக் குழப்பும் வகையிலேயே இவ்வாறான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இதை நம்பவேண்டாம். பிரதமருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடி கொடுக்க விடமாட்டேன்" என்றுள்ளார்.
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment