‘தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் ஏதுமில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க.வை மீட்போம்’ என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ‘இரட்டை இலை’ வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சின்னம் தொடர்பாகவே தேர்தல் ஆணையம் பாரபட்ச தீர்ப்பு வழங்கி உள்ளது. கட்சி கொடி பற்றி ஆணையம் எதுவும் கூறவில்லை என தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தை கேட்போம். ஆனால் தொப்பி சின்னத்தை முடக்க மாநில தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனி கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எனது அணியில் இருந்த மக்களை உறுப்பினர்கள் என்னிடம் கூறிவிட்டுதான், பதவி பயத்தால் தான் முதலமைச்சர் அணியில் சேர்ந்தனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இடைத்தேர்தலில் யாரிடமும் ஆதரவு கோரும் எண்ணம் இல்லை எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.
Home
»
Tamizhagam
»
தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென்று அ.தி.மு.க.வை மீட்போம்: டி.டி.வி.தினகரன்
Tuesday, November 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment