‘அறம்’ படத்தை தனக்கு நெருக்கமான சிலருக்கு போட்டுக் காட்டினாராம் நயன்தாரா. பொதுவாக “நல்லா நடிச்சுருக்கீங்க, ஆஹா பிரமாதம்…” என்றுதானே சொல்லிட்டுப் போவார்கள்?
இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும், “எங்களுக்கு அப்படியே இன்னொரு ஜெயலலிதாவை பார்க்கிற மாதிரி இருந்திச்சு” என்று கூற, பரவசத்தில் பதில் பேச முடியாமல் தத்தளித்திருக்கிறார் நயன்.
இதே போல இன்னும் நாலு படத்தில் நடித்தால் உங்களை காலம் தானாகவே கொண்டு வந்து அரசியலில் தள்ளிவிடும் என்று சிலர் கூறிய கருத்தையும் அக்கறையோடு கேட்டுக் கொண்டாராம்.
சும்மா கிடக்கிற துளசி செடியை, பேசி பேசியே அரளி செடியா மாத்திருவாய்ங்க…. உஷாரா இருங்க நயன்!
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment