பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியுடைய வாழ்க்கை படமாகிறது. இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி,மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார். இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துவிட்டு ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஈரோடு மோகன் தயாரிக்கிறார்.
டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். நீண்டகாலமாக பொது பிரச்சனைகளை தீர்ப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவருக்கு சமீப காலமாக அதிமுக நிர்வாகிகளுடன் பேனர் அகற்றும் பிரச்சனைகளில் மோதல் ஏற்பட்டது, ஓரிரு முறை தாக்கப்பட்டார்.இப்படியான அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் "டிராபிக் ராமசாமி". விஜய் நடித்த மெர்சல் படத்தின் ரிலீஸின்போது பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் விஜயின் சார்பாக எஸ் ஏ சி அவர்கள் பாஜக,அதிமுக கட்சிகளுக்கு எதிராக தனது கோபத்தை மற்றும் விஜயின் எதிர்கால அரசியல் குறித்த நிலைப்பாட்டை பத்திரிக்கை பேட்டிகளிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் சமிக்சையாக வெளிப்படுத்தினார். இந்த நிலையில் எஸ் ஏ சி டிராபிக் ராமசாமியாக நடிப்பது மத்திய மாநில அரசுகளை விமர்சிக்கும் குரலாக அமையுமா என்ற கேள்வியை எழுப்புகிறது....
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment