தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் இழுத்து அழிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் வீடு, வளவு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் சுத்தப்படுத்தப்பட்டு, மரம் நடப்பட்டது. அத்தோடு, கேக் வெட்டியும் பிறந்த நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, யாழ். பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல இடங்களிலும் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
Sunday, November 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment