Saturday, November 25, 2017

மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆர்னோல்ட் விடுத்த கோரிக்கை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என்றும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer