Thursday, November 16, 2017

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 20 வயது கால்பந்து வீரர் லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாக சமூக வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஆனந்த நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஜீத்கான்,20 இவர் அங்குள்ள கல்லூரியில் பட்டபடிப்பை முடித்தார். சமீபத்தில் இவர் கையில் ஏ.கே. 47, துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதை வைத்து போலீசார் விசாரித்ததில் அந்த இளைஞர் காஷ்மீரில் உள்ளூர் கால்பந்தாட்ட வீரர் மஜீத் கான் என்பதும் என்.ஜி.ஓ.ஒன்றில் பணியாற்றுவதாக கூறிவிட்டு லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்ததும் தெரியவந்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த அமைப்பில் விலகி எங்களுடன் வரவேண்டும் எனவும் இல்லையென்றால் எங்களை மொத்தமாக கொலை செய்துவிடு எனவும் அவரது தாயார் ஆயிஷா கான் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர்.

மஜித்தின் நண்பரான யாவார் நிசார் என்பவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவத அமைப்பில் சேர்ந்தார். பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer