நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு இன்று புத்துயிர் பெறுகின்றது.
யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டில் இன்று சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்தின் தலைமையில் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெறுகின்றன.
இதன்போது, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, பட்டாசு கொழுத்தி தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், தலைவர் பிரபாகரன் இல்லத்தில் மரமும் நடப்பட்டது.
இதேவேளை, வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் பிறந்த நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும், இன்று பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் சில இடங்களிலும் கேக் வெட்டி இளைஞர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
Home
»
Tamil Eelam
»
பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு
Sunday, November 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment