தீபாவளிக்கு வந்திருக்க வேண்டிய படம் ‘கொடிவீரன்’. நவம்பருக்கு தள்ளிப் போய்விட்டது. ‘மெர்சல்’ வராது என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்களிடம் கை நீட்டிவிட்டார் சசி.
மெர்சல் வருவதாக தெரிந்ததும் ரிலீசிலிருந்து பின்வாங்க…. பணத்தை திரும்பி தந்தாலே போச்சு என்று அவரை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள்.
அதற்குள் கூரை மேல் வீசிய ஃபுல் மீல்ஸ் ஆகிவிட்டது பணம். விநியோகஸ்தர்களை சமாளிப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்ட சசி, கூப்பாடு போட்டவர்களை கூல் பண்ணிய விதமே தனி.
‘கொடிவீரன்’ படத்தின் சில காட்சிகளை போட்டுக் காண்பித்தாராம். ‘இவ்வளவு சூப்பரான படம்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கலெக்ஷன் நிச்சயம். வெற்றி நிச்சயம்’ என்று சொல்ல, நம்பிக்கையை கண்ணாலேயே கண்ட விநியோகஸ்தர்கள் சந்தோஷமாக ஊருக்கு ரிட்டர்ன்.
Tuesday, November 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment