யாழ் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் பேரை பாதுகாக்க என 17 பொலிஸ் நிலையங்கள். ஒரு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம். கிட்டத்தட்ட 2,000 பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் உள்ளார்கள். இவர்களின் 80 வீதமானவர்கள் தமிழ் மொழி அறவே தெரியாதவர்கள். மிகுதி 20 விகிதத்தில் உள்ளவர்கள், "அகண்ட வாய் உள்ளவன்" என்று சொன்னால் , என்ன ஆவா குழுவா? என்று கேட்ப்பார்கள்.
10 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றில் இருந்த எக்ஸ் MPள்கள் தொடக்கம். மாகாண சபை உறுப்பினர், நீதவான், அரச அதிபர்கள் என்று 24 மணி நேரமும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க என்று பல பொலிசார் சென்றுவிடுவார்கள். இதில் டெங்கு நுளம்பு பிடிக்க செல்லும் பொலிஸார். அதுபோக கள்ளக் கறன் எடுக்கும் நபர்களை பிடிக்க என்று பொலிசார் செல்கிறார்கள்.
இவை எல்லாம் போக மிகுதி உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச இலச் சினைகளையும் ஸ்டார்களையும் குத்திக்கொண்டு அதிகாரம் செய்ய உள்ளார்களே தவிர. யாழ் குடா நாட்டின் பாதுகாப்புக்கு என்று சரியான பொஸ் உத்தியோகஸ்தர் எவரும் இல்லை என்று தனது ஆதங்கத்தை முக நூலில் கொட்டி தீர்த்துள்ளார் ஒரு தமிழ் பொலொஸ் உத்தியோகத்தர்.
Tuesday, November 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment