Monday, November 20, 2017

இன்னும் நாலைந்து மாதங்களுக்குள் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சிப்பது போல ஒரு நிகழ்வு நடைபெற்றால் யாரும் அதிர்ச்சிக்கு ஆளாகத் தேவையில்லை. ஏன்? இந்தியாவின் வேர் நீரை உறிஞ்சி தயாரிக்கப்படும் குளிர்பான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.

லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு விக்கல் வரவழைத்துவிட்டு, தயாரிக்கப்படும் இத்தகைய குளிர்பான விளம்பரத்தில் நடித்த விஜய்யை இன்னதென்று இல்லாத வார்த்தைகளால் நொறுக்கும் சோஷியல் மீடியா, இப்போது என்ன பண்ணப் போகிறதோ? ஆனாலும் அது பற்றியெல்லாம் யோசிக்காமல் அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டாராம் இசைப்புயல்.

இந்த விளம்பரம், இந்தியாவின் எல்லா மாநிலத்துக்குமானது. அத்தனையிலும் இசைப்புயல்தான் நடிக்கப் போகிறார். விளம்பரம் ஒளிபரப்பாகும் நாள், புயல் வலுவிழக்கும் நாளாக அமையலாம்...

0 comments :

Post a Comment

 
Toggle Footer