அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த ஒரு பாலின திருமணங்களை சட்ட பூர்வமாக்குவது தொடர்பிலான தபால் மூலமான வாக்கெடுப்பில் 61.6% வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் இக்கருத்துக் கணிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது.
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதை அடுத்து ஆதரவாக வாக்களித்த மக்கள் பொது இடங்களில் வண்ணமயமான கொடிகள் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தபால் மூலமான வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இது குறித்து மிக நீண்ட காலமாக நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாக்கெடுப்புக்குத் தகுதியான மக்களில் 79.5% வீதமானவர்கள் பங்குபற்றி இருந்தார்கள் என்றும் வாக்கெடுப்புக்கான செலவு $122 மில்லியன் டாலர்கள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய மொத்த மக்கள் தொகையில் மிகவும் சிறுபான்மையினரான ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காக மிகப் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்திருப்பது சமூகக் கட்டமைப்பு அடிப்படையில் ஆபத்தானது என்றும் அங்கு விமரிசனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Friday, November 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment