ஏற்கனவே வருடக்கணக்காக இழுபட்டு வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் மாதம் (04) வரை இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏற்கனவே வருடக்கணக்காக இழுபட்டுவரும் தேர்தல்களை மேலும் இழுத்தடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலை, மேலும் காலதாமதப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கின்றோம். இவ்வாறான முயற்சிகளை கைவிட்டு விரைவில் தேர்தலை நடத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.” என்றுள்ளார்.
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment