கமல்ஹாசனை கிண்டல் செய்தாரா அர்ஜுன்
கமல்ஹாசன் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன? கொடி நிறம் என்ன? கொள்கைகள் என்னென்ன? என்று ஜனங்கள் குழம்பிக் கொண்டிருக்க... ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ‘சொல்லிடலாமா?’ என்று அவர் கேட்க, ‘சொல்லுங்க சொல்லுங்க’ என்கிறார்கள் உடன் இருப்பவர்கள். ஏதோ புதுக் கட்சி துவங்குகிற அளவுக்கு பில்டப் கொடுக்கிறார் அர்ஜுன். கடைசியில், ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க. நான் இயக்குகிற சொல்லிவிடவா படத்துக்கு புரமோஷன் வீடியோ’ என்று பின் வாங்குகிறார். பிரச்சனை அதுவல்ல... கமல் கட்சி துவங்கப் போகிற இந்த நேரத்தில் அவரை முழுக்க முழுக்க கிண்டல் செய்வது போல இருப்பதுதான் இந்த வீடியோவின் வில்லங்கம். ஆக்ஷன் கிங்குக்கு உலக நாயகனை விட எந்திர நாயகன் மேல்தான் விருப்பம் போல....
0 comments :
Post a Comment