அப்பா ஆயிரம் படத்தை தாண்டிவிட்டார். இப்பவும் காலை ஆறு மணிக்கு ஆர்மோனிய பொட்டியும் கையுமாக கம்போசிங்கில் உட்கார்ந்துவிடுவது அவரது டெடிக்கேஷன்.
ஆனால் மகனுக்கு அதற்குள் சினிமா அலுத்துவிட்டதாம். ‘மறுபடியும் மறுபடியும் ட்யூன் கம்போசிங்னு… ஒரே போர்’ என்கிறாராம்.
யாருய்யா அந்த அப்பா மகன்? இன்னுமா புரியவில்லை? இசைஞானியும் அவரது யுவ புத்தினும்தான்.
யுவனுக்கு சினிமா அலுத்துப் போகவில்லை. இசைதான் அலுப்பாம்.
‘இதே சினிமாவில் டைரக்ஷன், தயாரிப்புன்னு நிறைய வேலை இருக்கு.
பேசாம அப்படி போகலாம்னு இருக்கேன்’ என்று அவர் கூறிய நேரம்… கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது வாய்ப்பு.
அஜீத்- சிவா இணையும் அடுத்த படத்திற்கு யுவன்தான் இசை.
நீங்கதான் வேணும் என்று வற்புறுத்தி அழைத்தார்களாம். ஓகே சொல்லியிருக்கிறார் யுவன்.
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment