“எங்களை அரசியலில் இருந்து விரட்டவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகின்றது. ஆனால், இந்த சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் பயப்படுகிறவர்கள் கிடையாது. நாங்கள், தொடர்ந்தும் அரசியலை திடமாக முன்னெடுப்போம்.” என்று அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 200 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகின்றது. இந்த நிலையிலேயே, டி.டி.வி.தினகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Thursday, November 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment