Sunday, November 26, 2017

நயன்தாராவும் த்ரிஷாவும் எல்லா காலத்திலும் எதிரெதிர் துருவம்தான். 20/20 கிரிக்கெட் போட்டி சமயத்தில் தூதராக முதலில் நயன்தாராவை நியமித்து, அதற்கப்புறம் அவரை தூக்கிவிட்டு அந்த இடத்தில் த்ரிஷாவை உட்கார வைத்தார்களே... அப்போதிலிருந்து இந்த ரைவல் இன்னும் ஜாஸ்தியாகிவிட்டது.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் ரகசியமாக காலை வாரிக் கொள்ளும் இவர்களில் எப்பவும் நயனுக்குதான் வெற்றி. இப்பவும் சாமர்த்தியமாக த்ரிஷாவை கோர்த்துவிட்டுவிட்டார் நயன். அறம் படத்திற்காக தியேட்டர் விசிட் அடித்தார்.

சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்தார் என பிரமோஷனுக்கு உதவியதாக நயனுக்கு குட் மார்க். சில தினங்களுக்கு முன் கூடிய தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் இந்த விஷயம் அலசப்பட.... ‘பிரமோஷன்களுக்கு வராத த்ரிஷாவுக்கு ஏன் ரெட் போடக் கூடாது?’ என்றார்களாம்.

இவங்க தில் குறித்த பெரிய திகில் த்ரிஷாவுக்கோ, நயனுக்கோ எப்பவும் இருந்ததில்லை என்பதால், ‘இந்த ரெட் என் ரிப்பனுக்கு கூட சூட்டாகாது’ என்கிற ரேஞ்சில் கிண்டலடித்தாலும் ஆச்சர்யமில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer