Friday, November 10, 2017

இந்தியா ஒரே நாடுதானே? நான் பாண்டிச்சேரியில் பர்சேஸ் பண்ணினா என்ன, பெங்களுர்ல நிலம் வாங்குனா என்ன?

எல்லா மாநிலத்திலேயும் ஒரே ரூபாய்தானே? வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரி கட்ற எனக்கு இந்த உரிமை இல்லையா? நான் குற்றம் செய்ததை போல இந்த மீடியா விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பொங்கிவிட்டார் அமலா பால்.

எல்லாம் இந்த போலி முகவரியில் கார் வாங்கிய விவகாரத்தில்தான். அமலாவின் இந்த வாதம் சரியா, தப்பா என்பதை நீதிமன்றமும், சட்டமும்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் இப்படியொரு குறுக்கு வழியில் கார் வாங்கினால், பல லட்ச ரூபாய் லாபம் என்று ஐடியா கொடுத்த புரோக்கருக்கு அதிர அதிர திட்டு விழுந்ததாம். மிச்சப்படுத்திய ரூபாயை இப்பா தப்பிப்பதற்காக செலவு பண்ணிக் கொண்டிருக்கிறார் அமலா ப்யூர் பால்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer