Saturday, November 25, 2017

இப்படியொரு சர்ச்சை வரும் என்றே தெரிந்துதான் ‘நாச்சியார்’ டீசரை வெளியே விட்டாராம் பாலா. டீசரில் ஜோதிகா சொல்கிற அந்த அருவருப்பான டயலாக்குக்கு பாலா நினைத்த மாதிரியே நாலாபுறத்திலிருந்தும் எதிர்ப்பு. சமூக வலைதளங்களில் சிவகுமார் பேமிலி எப்படி இதை அனுமதிச்சுது? என்று கேள்வி கேட்டு வறுத்தார்கள். சில சினிமா பிரமுகர்கள் நேரடியாக கேட்கவே செய்தார்களாம்.

எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்ட சிவகுமார் பேமிலி, “பாலாவிடம் யார் சொன்னாலும் கேட்க மாட்டாரே...” என்று ஒருவரியில் முடித்துக் கொண்டதாம் தங்கள் விளக்கத்தை.

மற்றவர்களுக்கு இப்படி பதிலாக சொன்னாலும், பாலாவிடம் தங்கள் வருத்தத்தை தெரிவிக்க தவறவில்லையாம் இவர்கள். படத்தில் இதைவிட நிறையவே பேசியிருக்கிறாராம் ஜோ. அதெல்லாம் வரும்போது என்னாகுமோ ஜோ-வின் இமேஜ்?

0 comments :

Post a Comment

 
Toggle Footer