Saturday, November 4, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer