ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன் போட்டி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில், ஆட்சிமன்றக் குழு கூடியது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சில மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனனை மீண்டும் களமிறக்க முடிவு செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment