Thursday, November 23, 2017

மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு மறை மாவட்ட துணை ஆயராக கடமையாற்றி வந்த இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆண்டகை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையின் சார்பாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை இதற்கான அறிவிப்பை விடுத்தார்.

அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் இந்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டது.

புதிய ஆயரின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer