Wednesday, November 1, 2017

தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய்க்கு ‘வல்லிய’ ரசிகர்கள் உண்டு. மெர்சல் படத்திற்ககாக கட் அவுட், பேனர், பால்குடம், அபிஷேகம் என்று அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

வசூல், தமிழ்நாடு வசூலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்கிறார்கள். அதே போலொரு கொண்டாட்டத்தைதான் தெலுங்கு தேசத்திலும் எதிர்பார்க்கிறார் விஜய்.

அந்தோ பரிதாபம்... அங்கு ‘அதிரிந்தி’ என்ற பெயரில் வெளியாகவிருந்த மெர்சல் படத்திற்கு தொடர்ந்து கட்டையை போட்டு வருகிறார்கள்.

இங்கு பேசப்பட்ட அதே ஜி.எஸ்.டி வசனங்கள் அங்கும் இருப்பதால், நறுக்கு... தூக்கு என்று ஒரே அமர்க்களமாம்.

கட் பண்ணாமலே கடை வீதிக்கு வருவதற்காக காத்திருக்கிறான் அதிரிந்தி.

வரிய பற்றி யாரு பேசுனாலும் வரி வரியா கோடு போட்ருவாங்களோ? மத்திய அரசின் இந்த மறைமுக மிரட்டலுக்கு ரீயாக்ஷன் கொடுக்க தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

தமிழ்நாட்லேர்ந்து கேரளாவுக்கு ரசிகர்களை ஏற்றுமதி செய்து போராட்டம் வெற்றிபெற வழி பண்ணுங்கப்பா...

0 comments :

Post a Comment

 
Toggle Footer