எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) தனித்துப் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோரால் ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்தே தனது வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மத்தியுடன் முன்னெடுத்துவந்த இணக்க அரசியலூடாக வடக்கு மாகாணம் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்திலும் பல்வேறுபட்ட மக்கள் பணிகளை பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து முன்னெடுத்து மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்து கொடுத்திருந்தோம்
அந்த வகையில் எமது கட்சி மக்களின் நலன்களை பாரபட்சமற்ற வகையில் முன்னிறுத்தியதாகவும் கட்சியின் நிலைப்பாடான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சயாட்சி என்பதன் பிரகாரம் நாம் எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.” என்றுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
உள்ளூராட்சித் தேர்தலில் யாரோடும் கூட்டில்லை; தனிதே போட்டி: ஈ.பி.டி.பி. அறிவிப்பு!
Friday, November 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment