Saturday, November 25, 2017

அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னம் இப்போது துரோகிகள் கையில் இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன் பேசியதாவது, “இரட்டை இலை இப்போது துரோகிகள் கையில் இருக்கிறது. அது அவர்கள் கையில் இருப்பதால் அதற்கு இப்போது உயிர் இல்லை, செத்துப்போய்விட்டது. சின்னம் அவர்களுக்கு எப்படி கொடுக்கப்பட்டது, எதனால் கொடுக்கப்பட்டது என்பது மக்களுக்குத் தெரியும்.

தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பே, இவர்களுக்கு எப்படி தெரிந்தது? அதிலிருந்தே என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லையா? நாங்கள் சட்டப்படி போராடுவோம். அப்படியும் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக தொப்பி சின்னத்திலேயே போட்டியிடுவோம்.

சின்னம் என்பது இரண்டாம் பட்சம்தான் வேட்பாளர்தான் முக்கியம். சின்னத்தை மட்டும் வைத்து ஜெயித்ததெல்லாம் அந்தக் காலம். இப்போது, அப்படி இல்லை. மக்கள் ஏற்றுக்கொண்ட வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, ஆர்.கே.நகரில் நான் தொப்பி சின்னத்தில்தான் நின்றேன். அப்போது, கருத்துக்கணிப்பு வெளியிட்டார்களே, அதில், எனக்குதானே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று வந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தொப்பி சின்னத்தில் நின்று ஜெயிப்பேன்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer