“இரகசிய தடுப்பு முகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை. அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தமது பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள்.
இதன்போது, நாட்டின் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர்களது பிரச்சினைகள் குறித்தும் தமக்கு பரந்த புரிந்துணர்வு இருப்பதாகவும், மிகவும் நியாயமான விதத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள், தகவல்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப்பத்திரங்களை மாவட்ட செயலாளர்கள் ஊடாக கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை சேகரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமும், காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவும் மீள்பரிசீலனை செய்ய உள்ளன.
Home
»
Sri Lanka
»
இரகசிய தடுப்பு முகாம்கள் ஏதும் தற்போது இல்லை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!
Friday, November 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment