ஆணானப்பட்ட ஷங்கருக்கே இந்த நிலைமையா? இப்படிதான் அதிர்ச்சியடைய வேண்டியிருக்கிறது. யெஸ்... வடிவேலுவுக்கு அட்வான்ஸ் கொடுத்து ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தை துவங்கினார் அல்லவா? வைகைப்புயலின் அட்ராசிடியின் காரணமாக அந்தப்படம் பாதியில் டிராப்.
வாங்கிய அட்வான்சை திருப்பி தர வேண்டும் அல்லவா? இந்த விஷயத்தில் வடிவேலு ‘வழுக்கிய’ வேலாக மாறி தப்பித்துக்கொண்டேயிருக்கிறாராம்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக நின்றார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஷங்கரின் புகார் மனுவை கிடப்பில் போட்டுவிட்டது சங்கம். முள்ளங்கி பத்தை போல மூணு கோடி ஸ்வாகா!
Wednesday, November 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment