Friday, November 3, 2017

‘நாட்டில் இப்போது இந்துத் தீவிரவாதம் இருக்கின்றது. அதனை யாராலும் நிராகரித்துவிட முடியாது’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றிய கேள்விக்கு, கமல் அளித்த பதில்: “கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இது தொடர்பாக, சினிமா கலைஞர்களையும், ஜாதி வாரியாக பிரித்து, பட்டியலிடும் வேலையையும், அவர்கள் துவக்கி விட்டனர்.

இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். 'எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள்' என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது.வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை விட, வலிமையே வெல்லும் என்ற நம்பிக்கை, காட்டுமிராண்டிகள் ஆக்கி விடும். சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக, தமிழகம் மாறும் நிலை, வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில், கேரளா, முன்னுதாரணமாக திகழ்கிறது.” என்றுள்ளார்.

இதனிடையே, கமல்ஹாசனின் இந்துத் தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer